தேங்கி நின்று
நகர மறுக்கும்
தேர்ந்தெடுத்த
வார்த்தையின்
உரையாடல்கள்....
அதிகரிக்கும்
மௌனத்தின்
அடர்த்தியின்
இடைவெளியில்
நலமும் நடந்த
நிகழ்வு விசாரிப்பும்
என்றோ
விசேஷ நாளில்
வீடுவரும் விருந்தாளியாக
காட்சிப்படுத்தி
வழியனுப்ப...
கண்ணீரில்
நனைகின்றது
கால நேரமின்றி
காதலில் கசிந்துருகி
காதல் மொழி
பேசிய காலங்கள் !!
கற்பனையாக ✍️ ஹசன்


No comments:
Post a Comment