திருத்தப்பட்ட புதிய தவணை அட்டவணை
பாடசாலைகளின் தவணைகள் தொடர்பாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. வெளியிடப்பட்டதவணை அட்டவணை சுற்றுநிருபம் இதன் மூலம் திருத்ப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முதலாம் தவணை –முதலாம் கட்டம் – 2022.04.18 முதல் 2022.05.20 இரண்டாம் கட்டம் – 2022.06.06 முதல் 2022.09.07
இரண்டாம் தவணை — முதலாம் கட்டம் – 2022.09.12 முதல் 2022.11.25 வரை ரெண்டாம் கட்டம் – 2023.01.02 முதல் 2023.01.13
• மூன்றாம் தவணை – 2023.01.16 முதல் 2023.04.04
திங்கட்கிழமை (25) முதல் மறு அறிவித்தல் வரை வாரத்தின் 3 நாட்கள் மாத்திரம் பாடசாலைகளை நடத்துவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய 3 நாட்களிலும் பாடசாலைகள் வழமையான நேர அடிப்படையில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. பாடசாலைகள் நடைபெறாத புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்களுக்கு வீட்டிலிருந்து கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்தல் அல்லது இணையத்தில் கற்பித்தல் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


No comments:
Post a Comment