#உனக்கு_தெரியுமா?
உறங்கா இரவுகளில்
நீயும் நானும் உலா வருவது....
உனக்கு தெரியுமா
தனிமைக்குள் தாழிட்டு
உன்னை மட்டும் அனுமதித்தது....
உனக்கு தெரியுமா
உதடு உதிக்கும் புன்னகையின்
உயிரோட்டமாக நீ இருப்பது....
உனக்கு தெரியுமா
எதையும் கடந்து போகும் மனம்
உன்னோடு மட்டும்
நிலைத்து நிற்பது......
உனக்கு தெரியுமா
வாய் மொழிகளில்
உன்னை பற்றிய வார்த்தைகள்
என்னையும் அறியாமல் வருவது....
எனக்கு தெரியும் இது எதுவுமே
உனக்கு தெரியாது என்று!!!
✍️துகினம்ஹசன்


No comments:
Post a Comment