பெரிய இடமென்றார்கள்
குப்பை மேடு காட்சியளித்தது...
நறுமணம் என்றார்கள்
துர்நாற்றம் வீசியது....
மாமனிதர் என அவர்களே
அழைத்து கொண்டார்கள்
மானம் என்னும் ஆடையில்லா
அம்மனமாக தெரிந்தார்கள்.....
சாக்கடையில் குளித்து கும்மாளமிட்டு
பகலில் கூச்சலிடும் குரங்கு கூட்டம்
இரவில் அமைதியாக
அடுத்தவன் பொருளை
அபகரித்து ஆனந்தம் கொள்வதென்பது
பிறவி குணம் இழிபிறப்பின் குணம்!
✍️துகினம் ஹசன்


No comments:
Post a Comment