அந்தி மழை........
அந்தி மாலை
அமைதயாகிறது
இருள் மாயை
சூழ்ந்து கொள்கிறது ...!
வெறுமையோ
தனிமையோ என்னை
நானே ஆசூவாசப்படுத்தி
வரிகளில் நனையப்
போகிறேன் ...!
ஒவ்வொரு துளியும்
மெல்ல மெல்ல
என் உணர்வுகளை
தட்டுகிறது ...!
பச்சை இலைகளில்
சிறு துளிகள்
பட்டுத் தெறிக்கிறது ...!
நான்
கை வைத்து
தடவிக் கொள்ளும் இடங்கலெல்லாம்
சின்னஞ்சிறு கொடிகள்
பட்டு பட்டு
மழை நடனம் ஆடுகிறது
தூரத்தில் தெரியும்
மின் கம்பமும்
தன் வெளிச்சத்தில்
ஒரு பகுதியை
இன்றைய மழைக்கு
வரதட்சணையாக வழங்கி
அழகில் மெருகூட்டியுள்ளது...!
#இவனின்_கிறுக்கல்கள்
#சப்ரான்_நஜீர்


No comments:
Post a Comment