Latest

Post Top Ad

Your Ad Spot

Tuesday, October 25, 2022

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்??

 GCE OL பெறுபேறுகள் இந்த வாரத்துக்குள் வெளியாகும் என பல்வேறு சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவுவதை அவதானிக்க முடிகின்றது.. எனினும் பெறுபேறுகள் தொடர்பாக இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில்




*அடுத்த மாதம் நிறைவடைவதற்கு முன்னர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குரிய பெறுபேறுகளை வௌியிட எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் (2022/10/18) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்*

பெரும்பாலும் அடுத்த மாத இறுதி வாரத்தில் பெறுபேறுகள் வெளியாவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது..

*இருப்பினும் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு உத்தியோகபூர்வமான திகதியை இன்னும் பரீட்சைகள் திணைக்களம் அறிவிக்கவில்லை!*

*ஆகவே போலிச்செய்திகளை நம்பவேண்டாம்!*

தேசிய அடையாள அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டமையினால் மாணவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே கலாநிதி சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்தார்.

தேசிய அடையாள அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபரினால் வழங்கப்பட்ட அடையாளச் சான்று ஏற்றுக்கொள்ளப்படும் எனவும், பரீட்சைக்குத் தோற்றிய எந்தவொரு மாணவர்களின் அடையாளத்தை மீள் சரிபார்ப்பதற்கு எவ்வித காரணமும் இல்லை எனவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages