உன் மென்மையில்
இவனது எழுத்துக்கள்
பொன்னிற
பாதச் சுவட்டினை
பொறுமையிழந்தவனாக
வர்ணித்து தான்
எழுதுகிறேன் ...!
மென்மைக்குள் இவ்வளவு
அழகு என்பதை
காட்டுகிறாய் போலும் ...!
தத்தித்தவழும்
மழலையின்
அடியொட்டை நீ வைக்கும்
ஒவ்வொரு எட்டிலும்
காண்கிறேன் ...!
வெள்ளிக்கொழுசும் மின்னும்
தங்கமாகிவிடுகிறது
உன் மேனியினை
மேலிருந்து உரசுகையில் ...!
விரல்கள் ஒவ்வொனறையும்
வைத்த கண் வாங்காமல்
கொள்ளை அடிக்கிறேன் ...!
அதன் அசைவுகளில்
ஒவ்வொன்றும்
தென்றலே தீண்டி
சுகந்தத்தை தான்
தருகிறாய் ...!
விரலிடையில்
கடலலையினை ஓட விடு
ஒரு முறை
உப்புச் சுவையும்
தேனாக மாறிவிடட்டும் ...!
சிறு
மெட்டியை இறுக்கி
விரலுடன் அணைப்பில்
யுத்தம் செய்ய வைக்கிறாய் ...!
ஒரு பாதத்தின் மீது
மற்றதையும் வைத்ததில்
மலர்செண்டின் மீது
இன்னொன்றையும்
வைத்தது தெரிகிறது ...!
அந்த செந்நிறத்தில்
கூட
அழகான கரும்புள்ளி
மச்சம் இருக்காதா என்று
தேடுகிறேன்
கள்வனாய்
தரையில் வைக்கும்
ஒவ்வொரு எட்டும்
என் உள்ளங்கையில்
வைக்க கூடாதா ...!
#இவனின்_கிறுக்கல்கள்
#சப்ரான்_நஜீர்


No comments:
Post a Comment