Latest

Post Top Ad

Your Ad Spot

Saturday, August 20, 2022

சிதைந்து போன உள்ளம். - Pottuvil Jasmiya

  பாகம் 1


அது  ஒரு கனாக் காலம்...

இரண்டு சகோதரனுக்கு  அவள் மூத்த பிள்ளை. ராவியா எனும் பெயர் கொண்ட அவள் கருநிறதுடனும் பார்க்கின்ற நேரம் எல்லாம் புன் சிரிப்புடனும் ஜோலித்துக் கொண்டிருக்கும் முகசுபாவனை கொண்டவள் ராவியா..


அவள் அறிந்த வயதில் தன் மாமாவின் முகத்தை பார்த்தே வளர்ந்தவள்..

அவளது தாய் வறுமையின் காரணமாக தன் பிள்ளையான ராவியாவை தனது உடன்பிறப்பானே தம்பியிடமே ஒப்படைத்து விட்டுச் சென்றாள்..


அவள் ஒப்படைத்து செல்லும் போது ராவியா ஒரு வயது பால்குடி மறவாதே குழந்தை...


ராவியாவின் தந்தையோ அவள் வயிற்றில் இருக்கும் போதே தன் தாயை விட்டு பிரிந்து சென்று விட்டான்..


தந்தை இல்லாமலும் தாய் இல்லாமலும் தன் மாமாவின் அரவணைப்பில் வளர்ந்தள்..


ராவியாவின் தாய் தன்னுடைய பிள்ளை பால்குடி மறவாதே வயதில் அவளை விட்டு வந்து விட்டோம் என்பதை எண்ணியும் தனது கல்நெஞ்சக் கணவனை எண்ணியும் ஒவ்வொரு நாளும் அவளது உள்ளம் சிதையே..!!வெளிநாட்டிலே நான்கு 

வருடங்களை கழித்து வீடு திரும்பினாள்..!!


அப்போது ராவியா ஐந்து வயது பூர்த்தியான சிறுமியாக இருந்தால்...

கன்றை பிரிந்தே கராம்  பசு போல

தன் பிள்ளையை கண்டவுடனே கட்டியணைத்து  அன்பு மழையை பொழிவித்தால்..


ராவியாவின் தாய் ஒரு இளம் பெண்ணாகவே இருந்தாள்.. அன்று ராவியா மட்டுமே அவளிற்கு  பிள்ளை..

ரவியாவிற்கு ஐந்து வயதானே பின்பும் கூட அவளது தந்தை அவளை ஒரு முறையாவது பார்க்க வரவில்லை..!!


Written by:-Jazy


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages