![]() |
| #அமீனாபுஹாரிபுத்தளம் |
ஆர்ப்பரிக்கும் இரவும்
ஆகாய மின்மினியான நட்சத்திரங்களும்
கரு விசும்புகளிடைய ஒளிந்து மறைந்து பின்
தெரிந்து விளையாடிடும்
வெட்கந்தனில் பாதி முகம் காட்டும் இந்த
நிலவும் ....
அமைதியை தர வேண்டும்
அல்லது
இனிமையை தரவேண்டும்
ஆனால் இவை ஒட்டுமொத்தமாய் உன் நினைவுகளை மட்டும் என்னிள் கிளறிச்செல்கிது.....
ஓ ...நினைவுகளே
கொஞ்சம் ஓய்வெடு
இடைவெளியே இல்லாமல்
இம்சிக்காதே...
ஓர் நத்தை ஊர்வதை போல் என்னில் ஊறாதே...
ஓ....நினைவுகளே கொஞ்சம் ஓய்வெடு
இடைவெளியே இல்லாமல்
தினம் வதம் செய்யாதே!
ஓ நினைவுகளே நீ
காற்றோடு கலந்துவிடு..
அல்லது
மண்ணோடு புதைந்துவிடு
ஓ நினைவுகளே!
ப்ளீஸ்..... என்னை மட்டும் விட்டுவிடு😉
-அமீனா புஹாரி
புத்தளம்


No comments:
Post a Comment