"ஒட்டிடவே முயல்"
![]() |
| #SirfiFahman |
ஏன் பிறந்தோம் எனப் புலம்பும் பகலிரவு வரும் வரை
இப்பார் அழியாவெனவுரைத்தார் ஒரு பெருந்தலைவர்
வேஷமிட்டு வாழ்கின்ற வஞ்சகமாந்தருள் வேஷம் பொருந்தா வீண் போனவன் போல் நான் வாழ்கின்றேன்
நண்பர் படை நன்றாகவே நான் பிடித்தேன்
அதில் நல்ல மனதுடையோர் பொறுக்கிடவே ஏன் மறந்தேன் - பின்
மனதுடையோர் மனங்கண்டு மகிழ்ந்திடவே
எனை இரசித்திட்ட சில பலரும் சிதறினரே
அல்லல்களை அணுகாமல் அடக்கியே வாழ்ந்தாலும்
அரவணைக்கும் நண்பர் பலர் அல்லல் மட்டும் எண்ணுவரே
எள்ளளவு தவறிழைத்தேன் - அதுவும்
என் மதி மறந்தே
பழகியோரெல்லாம் பிழை செய்தும் -அவரை
நம்பியதெல்லாம் என் பிழையே
பாருலகில் பிழைத்துவாழும் பலரினதும் பழக்கமறியேன்
தப்பிப்பிழைக்க முயல்கையில்
தரம் கெட்ட சிலரின் தன்மை அறிந்தேன்
குறித்துச் சொல்லல் குத்தமே - ஆகவே
குறியில் சொல்கிறேன் புரிவீரே
வாய் மூடி வீற்றிருந்து வதையாக விரும்பவலையே - ஆகவே
திறனிருந்தும் திறக்காத விதை போல் நானே
கூடப்பழகும் சில பலரே
உமக்கொன்று உரைக்கிறேன்
உற்ற நட்பினை உண்மையிலும் உன்னதமாய்க் கொள்க
சேர்ந்தே பயணித்து மோற்சம்பெறுக


No comments:
Post a Comment