காலம் கடந்து போய் விட்டது
காத்திருப்பும் வீணாகி விட்டது
அவளும் கடந்து போய் விட்டாள்
காதல் மட்டும் அப்படியே இருக்கிறது
ஊண் உறக்கம் தொலைந்ததன
கண்களும் அடை மழை பொழிந்தன
அவளின் நினைவுகள் கனத்தன
நானும் பித்துப் பிடித்தவன் ஆனேன்
அவள் ஓர் ஏமாற்றுக்காரி
அவள் ஓர் கல்நெஞ்சம் பிடித்தவள்
அவள் ஓர் அரக்க குணம் படைத்தவள்
அவள் ஓர் மெல்லக் கொல்லும் விஷமி
இருந்தாலும் அவளை நேசிக்கிறேன்
அவளுடன் கழித்த இனிய நாட்களை நினைத்தே வாழ்கிறேன்
காதலே பிடிக்காத எனக்கும் காதல் செய்யக்கற்றுக் கொடுத்தாய்
நன்றி உன் அனைத்திற்கும்...
Maestro Shafni
Puttalam


No comments:
Post a Comment