Latest

Post Top Ad

Your Ad Spot

Friday, August 26, 2022

மழலை பருவத்தில் நான் விழுந்த போதெல்லாம் ..

 




மழலை பருவத்தில் நான் விழுந்த போதெல்லாம் தூக்கி விட்ட கைகள் அது. 

இன்று ஏனோ நான் எழும்ப முயற்சிக்கும் போதெல்லாம் நிறுத்தும் கையாக மாறி விட்டது. 

பாலர் வகுப்பு முதல் பாடசாலை பருவம் வரை

"போய் வா மகளே" என்று ஆனந்தத்துடன் அனுப்பிய உன் கரங்கள் இன்று பட்டப்படிப்புக்காக கல்லூரிக்கு அனுப்ப மறுப்பது ஏனோ?

பெண் என்ற காரணத்தினால் என்னை முடக்கி விடாதீர்கள். 

இவ் பூவுலகில் மொட்டாக விரிந்து பூவாக மலர்ந்து வாசனை கொடுக்கும் ஒரு பொருளாக என்னை வாழ விடுங்கள். 

பெண் என்ற காரணத்தினால் மலாலா யூசுபை  அன்று அவரது உறவினர்கள் முடக்கி இருந்தால்! அன்று பெண் உரிமை கோரி மலாலா யூசுப் போராடி இருக்கவும் மாட்டார்.இன்று அவளை பற்றி உலகமே பேசி இருக்கவும் மாட்டாது .

பெண் என்ற காரணத்தால் என்னை முடக்கி விடாதீர்கள். 


இப்படிக்கு பெண்ணின் அவலக்குறல். 

 

MOHAMMED NASAR FATHIMA AAYSHA

3 comments:

Post Top Ad

Your Ad Spot

Pages