என் விம்பம் மூழ்கி
ஈரம் குளித்து
எழுகிறது
நான் நனையாது
நின்று கொண்டிருக்கிறேன்
கரையோரமாய்
சிறு கல் ஒன்று
விழுந்தாலும் புல்லொன்று
விழுந்தாலும்
கலங்கி விடும்
என் விம்பம்
நான் அப்படியேதான்
நின்று கொண்டிருக்கிறேன்
என் விம்பம் நான் செய்வதை
பிரதி பலிக்கிறது
நான்தான் அதற்கு
எதிராக இருக்கிறேன்
ஏனெனில்
என் விம்பம் அழும் போது
நான் சிரித்து கொண்டு
இருக்கிறேன்
#பாரி


No comments:
Post a Comment