நீ வருவாயா காந்த கண்ணழகே
தொலைந்து போயிருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன் உன்
நினைவலைகள்,
இல்லை அவை அப்படியே பத்திரமாய்
இதயத்தின் எங்கோ ஓர் விளிம்பில்
வீழ்படிவாய் கண்டேன்.
வீழ்படிவை அப்படியே கரைத்து ஒளிர்வண்ணங்கள்
தெளித்து
சில துளி நேசமலர்
வாசனை கலந்து
வரண்ட இதயமெங்கும் தாராளமாய் ஓடவிட்டேன்.......
நினையாமல் இருந்ததற்கு காரணம் தேடினேன்,
காலத்தின் இடைவிடா வேகமா? புதுமுகங்களின்
அறிமுகமா?
உறவுகளின் ஆக்கிரமிப்பா ? அர்த்தமற்ற
இடைவெளியா?
காரணம் இன்னும் கண்டறியவில்லை...
தன் தவறை மறைக்க
சொல்லபடுவதுதானே காரணம்.
அனுமதி வாங்காமலே உன் அழியாநினைவுகள் எப்படி என்னுள் சட்டென்று ஒட்டிக்கொண்டன?
உறவுகளின் ஏமாற்றங்கள்,
தட்டப்படாத தோள்கள்,
பகிரங்கமான அவமானங்கள்,
தொடர்ந்து வரும் தோல்விகள்,
ஆறுதலற்ற துயரங்கள், தனிமையை மட்டுமே
உணர வைக்கும்
பொழுதுகள்தான்
அனுமதி கொடுத்திருக்கும் போலும்.......
மங்காமல் மாறாமல் அதே பிம்பமாய்
உன் முகம் எனக்குள்ளே..
ஆம்! என் உயிர்த் தோழியே! உணர்வுத் தோழியே!
வேண்டுகிறேன் உன் அற்புத தோழமையை,
என் காந்த கண்ணழகே!
நம் கால் தடங்கள் பதியாத இடமில்லை பள்ளியிலே,!
உன் நினைவுத் தடங்கள் இன்னும் எனக்குள்ளே...
பிடிவாதமாய் உன்னையும் இழுத்து போகிறேன்
எதிர்பார்ப்பில்லா
அவ்வழகிய உலகத்திற்கு....
மீளாமல் அப்படியே அங்கு மிதந்திட நீ வருவாயா...?
By
Faheema mouzoon
Thiththawelgala.


👍
ReplyDeleteAwesome
ReplyDelete