இன்னின்ன இன்பங்கொண்ட இந்தவொருஉலகத்தில்
இதற்காயா வாழ்றாயென இழிப்பவனும் உளனே
முகமுன்னே சிரித்திட்டு முகமறைய சரித்திடும் மாமாந்தர் முகங்களை
இன்னின்னார் இதற்குரியார் என
உரையா என் இதயமே இரை- அட
இதயமே உரை
காண் தகா கஷ்டம் பல கண்ணெதிரே காட்டிடுவர்
கேள் தகா வார்த்தை சில கேட்டிடவும் செய்திடுவர்
படுதகா துயரம் பல தந்தும்
நெஞ்சிலா வஞ்சகன் போல் வாழ்ந்திடுவர்
எட்டுணையும் பட்டடையா அனுபவங்கள்
பிரிந்திடவே அது முடியா பாசங்கள்
எத்துனையோ மதிமறவா மகிழ்வுகள்
அத்துனையும் இழந்தனனே - இதெலாம்
உரையா என் இதயமே இரை- அட
இதயமே உரை
கண்டவனெல்லாம் கண்மூடி நம்பினால்
மாந்தன் வாழ் மந்தையில் மதிகெட்டு வாழ்வோரே
நடித்து வாழும் நல்லவர்களை மதித்து வாழ்ந்தால்
பிறகொரு படுகுழியே
இதெலாம்
உரையா என் இதயமே இரை- அட
இதயமே உரை
#SirfiFahman


Supper
ReplyDelete