Latest

Post Top Ad

Your Ad Spot

Tuesday, August 16, 2022

Edu free Academy யின் மாவட்டம் தோறும் மர நடுகை திட்டத்தின் கீழ் கண்டி மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொலிஸ் நிலையத்தில் மரநடுகை திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

 மாணவர்கள் கற்கும் சூழ்நிலைகளை பசுமை நிறைந்ததாக மாற்றிக்கொடுக்கும் நோக்கோடு Edu Free Academy யினால் ஆரம்பிக்கப்பட்ட மாவட்டங்கள் தோறும் மரங்கள் நடும் திட்டத்தில் கண்டி மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தரின் வேண்டுகோளுக்கு இணங்க  எமது கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் Rinuza Haniffa அவர்களின் ஒருங்கிணைப்பில் நேற்றைய தினம் அவர்களது அலுவலகத்தில் மரக்கன்றுகள் அன்பளிப்பு செய்யப்பட்டு நடப்பட்டது.



#KumuduniSenanayaka










இந் நிகழ்வில் #InspectorofPolice  #KumuduniSenanayaka - #ChildandWomenAffairs Bureau Kandy Police  இவர்களோடு இணைந்து கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள International English Language Center யின் நிறைவேற்று பணிப்பாளர் Mr. Farzam Zarook அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமை விசேட அம்சமாகும். 


குறிப்பாக எமது மர நடுகை திட்டத்திற்கு IELC நிறுவனத்தினால் 50 க்கும் மேற்பட்ட மரங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.


இத்திட்டத்தில் இணைந்து கொண்டு பசுமையான சூழலினை மாற்றியமைக்க மரநடுகை திட்டத்தினை மேற்கொண்ட அனைவருக்கும் எமது Edu Free Academy யின் நிர்வாகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் எமது கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் Rinuza Haniffa அவர்களுக்கும் விசேடமாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.


#TreePlantingProject2022

#ChildWomenBureauKandyDivision

#Kandy

#RinuzaHaniffa

#KandyDistrictCoordinator

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages