தாய் தந்தையரின் அரவணைப்பில் இருந்தேன்
என் அறியாப் பருவத்தில் துரதிஷ்டவசமாக உலகத்தை விட்டு பிரிந்தனர்
உறவுகள் சிலரை பெற்றேன்
என் மீது இருக்கும் பற்றைவிட என் சொத்தில் தான் அதிகம் பற்று வைத்தனர்
நட்புகள் அமைந்து விட்டனர் என பூரித்துப் போனேன்
அவர்களின் சுயதேவைகளுக்காகவும் பணத்தேவைகளுக்காகவும் தான் என்னுடன் பழகினர்
காதலி மூலமாக சரி நேசம் கிட்டும் என நம்பினேன்
அவளோ வசதியானவனோடு வாக்கப்பட்டு சென்று விட்டாள்
வாழ்க்கையில் ஓர் நாள் இறைவன் மூலமாகவாவது தூய நேசம் பெற்று விடுவேன் என தைரியம் கொண்டேன்
ஆனால் இறுதியாக புலம்பிக்கொண்டிருக்கிறேன் இறைவனும் கைவிட்டு விட்டானோ என்னவோ...
Maestro Shafni
From Puttalam


No comments:
Post a Comment