தனிமையை இனிமையாய் நினைத்து தனிமையை காதலித்த அவள்,
தனிமையை துணையென நினைத்துக்கொள்ள தனது அழகான வாழ்க்கையை அழுகிய குப்பைத் தொட்டியாய் மாற்றிவிட்டால்..
தனிமையில் பேசும் பித்துப் பிடித்த வித்தகியாய் இருட்டிலே உட்கார்ந்து
கொண்டு அதிஷ்டத்தை தேடும் அறிவிலியாய்
துன்பத்தில் துயர்ந்து போக, அவளது கண்களில் வருகின்ற கண்ணீரும் கூட கண்ணீர் சிந்த துடிக்கிறது..
அனுபவங்களை வைத்து அழகிய கற்றலை தேடத் தவறிவிட்ட அவளது
சிறு தவறும் இமயமாய் இதயத்தை கனமாக்கி விட அது இன்பமான வாழ்க்கையையும் பதம் பார்த்து விட்டது.
வேண்டா வெறுப்பாய் இவ்வுலக வாழ்க்கையை வாழத் துவங்காமல் கற்பனைகளை இன்றுடன் களைத்து விடு!
"எண்ணம் தான் வாழ்க்கை"
Nadha Iqbal
From Mawanella


No comments:
Post a Comment