Latest

Post Top Ad

Your Ad Spot

Friday, July 8, 2022

ஒரு ஆத்மா பேசுகிறது... ( இறுதி மூச்சு யா அல்லாஹ் யா ரஹ்மானே! )

 ஒரு ஆத்மா பேசுகிறது


ஹசீன் சஸ்னா பர்வின்


இறுதி மூச்சு யா அல்லாஹ் யா ரஹ்மானே!

பார்வை இருண்டு  விட்டிருக்க

அக கண்கள் மற்றும் திறந்திருக்க

என்னை சுற்றி இருப்போரை உணர்கிறேன்..


 குளிரான    இதமான மூச்சுக்காற்று

 என்னை ஸ்பரித்து செல்கிறது

 உயிர் பிரியும் தருணம்

 அருகி வருவதை அறிகின்றேன்..


 என் ஆன்மா வியாபித்திருக்கிறது

 சிரம் முதல்  பாதங்களின்

 விரல் நுனி வரை..


என் உறவுக்காரர்களோ என்னை சுற்றி இருக்கிறார்கள்

அவர்களின் அழுகை ஓலம்

என் காதுகளில் எதிரொலிக்கிறது..


 அவர்களோ நான் விட்டுப் போவதை

 இனி அழுகிறார்கள் - ஆனால்

 நானோ என் இறைவனை சந்திப்பதை

 நினைத்து மகிழ்கிறேன்..


சோதரனே!

ஏன் இன்னும் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறாய்

நிலையற்ற உலகில் நீ

சம்பாதித்தவைகள் என்ன?


 பணம் பணம் என்று

 பிணமாகுவது தான் மிச்சம்

 உறவுகளை துண்டித்து

 உலகையே வெஞ்சித்துக் கொள்கிறாயே!


 என் நிலை மாறுமா?

 இல்லை இல்லை

 உலகம்தான் மாற வேண்டுமா?

 என்று சொல்கிறதே நம் நிலை


 சோதரனே

 உன் இறுதி இலக்கு

 சொர்க்க சுகமா?

 நரக நெருப்பா?

 தாமதிக்காதே தீர்மானித்துவிடு..


✍🏻️ஹசீன் சஸ்னா பர்வின் ~

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages