மாதரை மதித்து வாழ்தல் மாநபி மார்க்கமாகும்.
நெடுநிலத்தை காக்க வந்த மறை யளித்த
யிறைவனுக்கே யெல்லாப் புகழும்
ஆண்னெனும் உளியை யெடுத்தவனது
விலாவில் செதுக்கப்பட்டவள் மங்கையே
மனித உயிர்களின் பிறப்பிடம் மாதரே
அகிலம் போற்றிய பேரன்பின் னுருவமே
மென்மை கொண்டவளுக்குள் கருவறை
வைத்து மேன்மையடைய செய்தவன் னிறைவனே
ஜாஹில்லியா காலம் மாதர் ருயிருடன்
மண்ணுக்கும், தையல் தரித்திரம் மென்றும்
கல்லிப் பாலும் பலியெடுத்ததுவே
குறைஷிக் குலமது பூமான் வரும்முன்னே
பகுத்தறிவு வுச்சம் தொடும் வரை
சுய விருப்பற்ற திருமணமும்
குடும்ப சமூக புற ஒதுக்கமும்
தீரா கொடூரம் தாண்டவம் ஆடியதே
இறை யறிவித்தவன் ஆடவனுக்கு
திரு மறையில் சூராஅர் ரிஜால்
என தரவில்லையே மானுடரே
அந்நிசாவை தந்து அந்தஸ்தை உயர்த்தினானே
ஆளவந்தவன் ஆண் அவனை
பத்துத்திங்கள் துயர் பாராது சுமந்தவளும்
உதிரத்தை லுணவாக்கி வாஞ்யுடன் அணைத்து
பாலுடன் பாசத்தையும் புகட்டியவள்
தந்தைக்கு இளவரசியாய் தமயனுக்கு கன்னையாய்
கரம் பிடித்தவனுக்கு சாலிஹான தாரமாய்
ஈன்ற செல்வங்களக்கு நேர் வழியாய்
குடும்பத்தின் அரசியானவள் அவளே
சதை பிண்ணமாக பார்க்கும் ஆடவருக்கும்
அகிலத்தாருக்கு குறவாக
உயிராய் உலவும் இறையோனின் உண்ணத
படைபள்ளவே
பருவமெய்தி வளர்ந்துவரும் மாரை
வெறி கொண்டு நோக்கும் காமுகனுக்கும்
பல்முளைத்து உணவு வுண்ணும்
வரை உனது பசி தீர்க்கும் கிண்ணமே
உணர வைப்போம் பெண்ணியத்தின் மகிமையை
சோதனைகள் தாண்டி வரும் வீரப்பெண்மை யவள்
மங்கையரை போற்றி
மதித்து வாழ்வது எமது கடமைல்லவே.
#இவனின்_கிறுக்கல்கள்
#சப்ரான்_நஜீர்


Masha Allah
ReplyDelete