இம்மாதம் 20ஆம் திகதி பாராளுமன்ற பெரும்பான்மையினை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி தேர்வு இடம்பெறவிருக்கும் தருவாயில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து கட்சி பேதங்களையும் முரண்பாடுகளையும் தவிர்த்து இவ் அரிய வாய்ப்பினை மிகக் கவனமாகக் கையாண்டு வடகிழக்கு தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வினை பெற்றுத் தரக்கூடிய ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கே தமது ஆதரவினை வழங்கவேண்டுமென்பது எமது எதிர்பார்ப்பு.
ஆகவே தமிழர்களுக்கு தீர்வினை பெற்றுத் தரப்போகின்றோம் அதிகாரப்பகிர்வினையும், சமஷ்டியினையும் பெற்றுத் தரப்போகின்றோம் என்று வெறும் பேச்சளவில் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் அவ்வாறான அதிகாரப்பகிர்வினை பெற்றுத் தரக்கூடிய ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை ஏனைய தமிழ் கட்சிகளுடனான பொதுக்கருத்தாடல் மூலம் வேட்ப்புமனுத்தாக்கல் செய்வதற்கு முன்னராகவே இனங்காட்டும் பட்சத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் தனது ஆதரவினை குறித்த ஜனாதிபதி வேட்பாளருக்கே வழங்கத் தயாராகவுள்ளது.
இவ் அரிய வாய்ப்பினை பயன்படுத்தத் தவறும் பட்சத்தில் அது ஒரு வரலாற்றுத் தவறாகவும் எமது சமூகத்திற்கான பாரிய இழப்பாகவும் அமைந்துவிடக்கூடும். எனினும் இச்சந்தர்ப்பத்தினை ஏனைய தமிழ் கட்சிகள் நழுவவிடும் பட்சத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது தன்னிச்சையாக செயல்பட்டு தமக்கு வாக்களித்த மக்களின் நலன் சார் விடையங்களை கருத்திற்கொண்டு தனது தீர்மானங்களை முன்னெடுக்கும் என்பதனையும் இவ்விடத்தில் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
சிவநேசதுரை சந்திரகாந்தன் MP
TMVP


No comments:
Post a Comment