ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக 134 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அத்துடன், டளஸ் அழகப்பெரமுனவுக்குவுக்கு ஆதரவாக 82 வாக்குகள் கிடைக்கபெற்றன.
மேலும், அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 3வாக்குகள் கிடைக்கப்பெற்றன.
இந்த நிலையில், ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ள வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment