Latest

Post Top Ad

Your Ad Spot

Tuesday, July 19, 2022

வாகன இலக்கத்தின்படி எரிபொருள் வழங்கும் நாட்களில் மாற்றம்

 வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்துக்கமைய எரிபொருள் விநியோகிக்கும் நாட்களில், திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.




ட்விட்டர் பதிவொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.


அதற்கமைய, நாடு முழுவதும் எதிர்வரும் 21 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்துக்கமைய, எரிபொருள் வழங்கப்படும் நாட்களில் இவ்வாறு மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


அதற்கமைய, 0,1,2 ஆகிய இலக்கங்களுக்கு செவ்வாய் மற்றும் சனி கிழமைகளிலும், 3,4,5 ஆகிய இலக்கங்களுக்கு வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளிலும், 6,7,8,9 ஆகிய இலக்கங்களுக்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களிலும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.


இதேவேளை, எதிர்வரும் 21 முதல் 24 வரையான திகதிகளில் கொழும்பின் பல இடங்களில் எரிபொருள் பெறுவதற்காக QR குறியீடு பரிசோதிக்கப்படுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages