Latest

Post Top Ad

Your Ad Spot

Wednesday, July 20, 2022

இன்றைய ஜனாதிபதி தேர்தலைப்பற்றிய சபாநாயகரின் விசேட அறிவிப்பு.

 



ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பு நிலையத்திற்கு கையடக்க தொலைபேசிகளை கொண்டு வர வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.


உரிய விதிகளுக்கு அமைவாக நாடாளுமன்றத்தினால் இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இன்றைய வாக்கெடுப்பில் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து அதனை வெற்றியடையச் செய்வதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாக சபாநாயகர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


1981 ஆம் ஆண்டு இலக்கம் 2 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் பிரகாரம் ரகசிய வாக்கெடுப்பில் தெரிவத்தாட்சியாக செயற்படும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages