![]() |
| #Mano_Ganeshan |
“கோதா” போக வேண்டும். ரணிலும் போக வேண்டும். இவர்கள் போய் சஜித் வந்தாலும், அல்லது இந்த “கோதாபய-கோ-கம” குரூப்பே வந்தாலும், நாம் பிரச்சனை நாம் பேசா விட்டால், அவற்றுக்காக நாம் போராடாவிட்டால் அவை தீராது. குறைந்தபட்சம் அரங்கத்துக்கே வராது.
ஆகவேதான், நான் எங்கே போனாலும், எங்கே மேடை கிடைத்தாலும், நமது மலையகத்தமிழர், ஈழத்தமிழர், முஸ்லிம்கள் என.... நம்மவர் பிரச்சினைகளை பேசுகிறேன். எல்லா மொழிகளிலும் பேசுகிறேன். முக்கியமாக சிங்களவர்கள் மத்தியில் பேசி விளக்குகிறேன்.
இதனாலயே சில சிங்கள பிரமுகர்களுக்கு என்மீது கொஞ்சம் சந்தோசம் இல்லாத கோபம். இவர் என்ன, "மதசார்பின்மை, இலங்கை என்பது பல்லின, பன்மொழி நாடு" என்றெல்லாம் பேசுகிறார் என யோசிக்கிறார்கள். நான் இவர்களை பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.
ஏனெனில் பெரும்பான்மை அரசியல் விடயங்களை பேச தொண்ணூறு விகித நாடாளுமன்றமும், பிக்குகள், சிங்கள சமூக பிரதானிகள், ஊடகங்கள் என எத்தனையோ பேர் உள்ளார்கள்.
ஆகவே நாமும் பெரும்பான்மை அரசியல்வாதிகள் பேசும் விடயங்களை பேசி, அவர்களை சந்தோஷப்படுத்தி, கைத்தட்டு வாங்குவதில் எந்த பயனும் எமது மக்களுக்கு, எனக்கு வாக்களித்த மக்களுக்கு இல்லை.
நம்ம பிரச்சனைகளை நாம் பேசினால்தான் உண்டு. இது எனக்கு வரலாறு கற்றுக்கொடுத்த பாடம்.


No comments:
Post a Comment