Latest

Post Top Ad

Your Ad Spot

Sunday, July 17, 2022

தமிழ் மற்றும் முஸ்லீம் அமைப்புக்களின் தடை பட்டியல் மீளாய்வு செய்யப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்

 தடைசெய்யப்பட்டுள்ள தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள்  மற்றும் முஸ்லீம் மக்கள் சார்பான அமைப்புக்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்று பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கையின் சட்ட நியமங்களுக்கு உட்பட்டு சமூக நலத் திட்டங்களை மேற்கொள்ள விருப்பம் தெரிவிக்கின்ற அமைப்புக்கள் தடை செய்யப்பட்டிருப்பின், அவற்றின் தடைகளை நீக்குவதன் மூலம், நாட்டின் அபிவிருத்தி மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை விரைவுபடுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.





பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் இன்று நடைபெற்ற சந்திப்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்ட நிலையில் குறித்த விடயமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages