நான் எப்போதுமே ஒரு சில சந்தர்ப்ப சூழ்நிலைக்கு அடிமையாகவே காணப்படுகின்றேன் அதன்போதே நாம் நம் இதயத்தினால் நேசித்த அந்த நபர்களின் சுயரூபத்தினையும் இத்தனை நாளாய் அவர்களினுல்லே மறைந்திருந்த உண்மை நிலையையும் அறிந்து கொள்ள முடிகின்றது.
தன் இயல்பை மறைக்க சமூதாய அக்கறையினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளோர் மற்றும் தான் கொண்டுள்ள பொறுப்பு வாய்ந்த பதவியிற்குள் ஒழிந்திருப்பவர்கள் நாளைய சமூகத்திற்கு படிப்பினையாய் திகழ்பவர்களே இன்று நமக்கு பெறும் படிப்பினைகளை கற்றுக்கொடுக்கின்றனர் இத்தனை நாள் பயணத்தில் கடந்த இந்த ஓர் சில நாட்களே சிலரின் மீதான அனுபவங்களை அதிகரித்துச்சென்று விட்டது
நாம் நினைப்பதைப்போல் யாவரும் நினைக்க மாட்டார்கள் என்பது யாவரும் அறிந்த விடயமே ஆனால் நாம் அவர்களை நினைத்தளவுக்கு கூட அவர்கள் நடந்து கொள்ள வில்லையே அது தான் மனதினை மயான பூமியாக மாற்றிக்கொண்டிருக்கின்றது. நீரின்றி தவிக்கும் போது ஆழ்துனை கிணற்றினால் கிடைக்கும் நீரின் மூலம் தான் நீங்கள் நிம்மதியடைவீர்கள். என்றால் அந்த கிணற்றின் மூலம் நீர் இழக்கும் விடயங்களை அறிந்திருக்க வில்லையா ?
இத்தனை நாள் நம்பிக்கைக்கு நான் கண்ட நாடகம் தான் காரணம் என்றால் முற்றுமுழுவதுமாய் அதை நான் வெறுக்கின்றேன் அதனோடு சேர்த்து அதில் நடித்த கதாபாத்திரங்களையும் தான்
#KavyPuyal


No comments:
Post a Comment