பதுக்கல் வியாபாரம் | அவசரத் தேவைக்காக எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியாமல் பிரிந்த எத்தனையோ உயிர்கள் | நாளை உங்களது உறவினர்களுக்கு இந்நிலை ஏற்படும்போது பதுக்கி வைத்தவை மேலா உங்களின் நம்பிக்கையினை கொண்டு சேர்க்க போகின்றீர்கள்.
![]() |
| பதுக்கல் வியாபாரிகளே உங்களின் கவனத்திற்கு |
சிறிய சந்தேகம் போதிய தெளிவின்றி முடிவினை பெற முடியாதுள்ளது. நாட்டின் இன்றைய பொருளாதார நிலையினை சற்று மறந்துவிட்டு ஓர் சில மாதங்களுக்கு முன்னே நாம் செல்வோமேயானால் எரிபொருள் கொள்வனவு மந்தமாகவும் அனைவருக்கும் போதுமானதாகவும் வேண்டியளவு தன் தேவையின்போது பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. ஆனால் இன்றோ பல நாட்கள் தொடர்ந்தேற்சையாக வரிசையில் நின்று கூட பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது என்றால் ? விலையேற்றத்தை தவிர தடங்கள் ஏதும் இன்றி இந்த காலகட்டங்களில் நம் தேவைக்கும் அதிகமாக எரிபொருள் நிலையங்களில் அவை நிரப்பப்படுகின்றது எனின் இப்பொழுது ஏன் இது நமக்கு போதுமானதாக அமைவதில்லை ?
எரிபொருள் நிரப்பு நிலையம் ( எரிபொருள் நிரப்புதாரி ) - எரிபொருள் பெற்றுக்கொள்ள செல்லும் நபர் இவர்கள் இருவரின் போதான பரிமாற்றம் போதுமானதாக அமைந்திருந்த காலத்தினை கடந்து இப்பொழுது மூன்றாம் நபராக ஒருவரின் தலையீடு இதனிடையில் தடைக்கல்லாக அமைந்து விடுகிறது. அதாவது கருப்பு சந்தை வரிசையில் காத்திருப்பவருக்கு ஏமாற்றத்தினை வழங்கிவிட்டு அவர்கள் இடத்தில் இருந்து போதியளவுக்கு எரிபொருளினை திருடிக்கொண்டு அதிக இலாபத்திற்கு வரிசையில் காத்திருப்பவர்களுக்கே விற்பது. அவர்களுக்கான உரிமத்தினை அவர்களிடம் விலை பேசி விற்கும் அளவிற்கு நம் சமூகம் மிருகத்தனமான இயல்புகளால் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றது எனலாம்.
மனித வாழ்வில் பிறரின் உதவிகளுக்கு தங்கி வாழும் நிலையானது எப்பொழுதும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றது. மனிதன் இன்னொரு மனிதனுக்கு உதவும் மனோநிலையைத்தான் மனிதம் என்பர் ஆனால் இன்றோ வரிசையில் காத்திருப்போரை ஏமாறச்செய்து விட்டு பண பலத்தினாலோ அல்லது வேறேதும் வகையிலோ அவர்களுக்கு சேர வேண்டிய எரிபொருள்களை கொள்ளையடித்துவிட்டு மனிதாபிமான அடிப்படையில் வரிசையில் காத்திருப்போரில் அவசர தேவைக்கு பரிதாபம் பார்த்து வழங்குவதாக கூறி அதிக இலாபத்தினை தேடிக்கொள்கின்றீர்.
பதுக்கல் வியாபாரத்திற்காக திருட்டத்தனமாக அளவுக்கதிகமான எரிபொருளினை திருடி வைத்துக்கொண்டுள்ளீர்கள் ஒருவேலை திடீரென எரிபொருளுக்கான விலைகள் குறைக்கப்பட்டால் நீங்கள் சம்பாதித்தவையை விட நட்டமடைவீர்கள் நட்டத்தினை கூட இது போன்ற இன்னொரு நிலையின் போது சரிசெய்து கொள்வீர்கள் ஆனால் பிற மனிதர்களை துன்பத்துக்கு உள்ளாக்கி இவ்வாறு நீங்கள் வாழும் நிலை பறித்தெடுக்கப்பட்டு இதனை விட ஒரு மோசமான நிலைக்கு நீங்கள் மட்டுமல்ல உங்கள் குடும்பத்தினரோடு எதிர்கொள்ளுமாறு உங்களது வாழ்க்கை உங்களுக்கு கட்டளையிட்டால் உங்களால் என்ன செய்ய முடியும் என்பதனையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
ஊண் உண்ணும் விலங்குகள் கூட பிற மிருகங்களிடம் இரக்கம் காட்டும் மாயைகளை கூட விழி பிதுங்க பார்த்திருக்கின்றோம் ஆனால் அதனை விடவும் நீங்கள் மிருகத்தனமாக நடந்துகொள்கின்றீர்கள் என்பதனை மறந்து விடாதீர்கள்.
Fathima Zahra Nisfer
Matale


Yes
ReplyDelete