தாயே...!
உன் முகம் நான் காண வேண்டும்
என் இறுதி மூச்சு
எனக்குள்ளவரை..!
உன்னைப்போல் ஒரு ஜீவன்
இதுவரையில் எனக்கில்லை
சுகமான பல சுமைகளை
நீ தாங்கினாய்
அந்நாட்களில்..!
கண்ணின் இமை போல்...
சிப்பியின் முத்து போல்...
மழையின் ஈரம் போல்...
நீ தான் இருப்பாய்
எனக்குள்ளே...
தீபம் ஒளிர கரையும் மெழுகு போல்..
உன்னை எனக்காய் கரைவித்த மெழுகு நீ...!!
நீயே என் ஒளி விளக்கு
நான் வாழும் காலம் வரை..!!
(05/12/2010 - செந்தூரம் )
பயாஸா பாஸில் - கஹட்டோவிட்ட


Maasha allah...
ReplyDeletegood
ReplyDelete