பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையிலான அறிவித்தல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதை அவதானிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறான அறிவித்தல்களை பகிரும், தயாரிக்கும் மற்றும் செம்மைப்படுத்துவோர் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய, பொலிஸ் தலைமையகம் கண்காணித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்த செயற்பாடுகளின் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ், சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.


No comments:
Post a Comment