நேற்றிரவு ஒரு மணியளவில் கோட்டா கோ கம வில் ராணுவத்தினரால் தாக்கப்பட்டு காயமடைந்தவர்களுக்கு விடியும் வரை மருத்துவ வசதிகள் மறுக்கப்பட்டிருந்தன.
சர்வதேச நியமங்களின் பிரகாரம் எதிரி நாட்டுப் படை வீரனாக இருந்தாலும் போர்க்களத்தில் காயமுற்ற நிலையில் அவனுக்கு உடனடி மருத்துவ வசதிகளை வழங்கவேண்டியது கட்டாயமாகும். அதுதான் மனிதாபிமானமும் கூட
ஆனாலும் அறவழியில் போராடிய குற்றத்துக்காக இவர்களுக்கு ஐந்து மணிநேரத்துக்கும் மேலாக மருத்துவ வசதிகள் மறுக்கப்பட்டுள்ளது. மனிதாபிமானமற்ற அரக்கர்களால் மட்டுமே இப்படி நடந்து கொள்ள முடியும்



No comments:
Post a Comment