Latest

Post Top Ad

Your Ad Spot

Monday, July 18, 2022

வாக்களித்த மக்களுக்கு இழைத்த அநீதியின் விளைவை அனுபவிக்கும் கோட்டா - இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் இலன்ஆகும் மற்றும் பெயர்த்து.

 மாலை தீவில் இருந்து கோட்டாவை சிங்கப்பூர் அழைத்துச் செல்ல மறுத்த 3 விமானங்கள்


- சர்வதேச அழுத்தம் காரணமாம்


#Go_Home_Gota



மாலைதீவில் இருந்து ஜனாதிபதி கோட்டா பயவை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்ல மூன்று விமானங்கள் தயார் நிலையில் இருந்த போதிலும், பல்வேறு சர்வதேச அழுத்தங்கள் காரணமாக ஜனாதிபதியை அழைத்துச் செல்ல அவர்கள் மறுத்து விட்டதாக, வெளிநாட்டுச் செய்திகளை ஆதாரங்காட்டி தமிழ் இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


மாலைதீவு வழியாக சிங்கப்பூர் நோக்கிச் சென்ற விமானம், ஜூலை 14 அன்று மாலே விமான நிலையத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அழைத்துச் செல்ல மறுப்பு தெரிவித்து, நடுவானிலேயே இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றதாகவும் உயர்மட்ட வட்டாரங்களை ஆதாரம் காட்டி அந்த செய்தி மேலும் தெரிவிக்கின்றது.


இந்தியாவில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் மாலைதீவு செல்வதற்காக புறப்பட்ட அரை மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் இந்தியா சென்றுள்ளது. இலங்கை ஜனாதிபதியும், அவரது மனைவியையும் குறித்த விமானத்தில் பயணிக்க இருந்ததாகவும், அதற்கு மறுப்பு வெளியிட்டு, விமானத்தை மீள இந்தியாவுக்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages