Latest

Post Top Ad

Your Ad Spot

Tuesday, July 19, 2022

தேர்தலில் தான் வேட்புமனுத்தாக்கல் செய்யப் போவதில்லை; டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்க தீர்மானம் - சஜித்

 


புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் தான் வேட்புமனுத்தாக்கல் செய்யப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.



அதன் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை வாபஸ் பெற்ற அவர், நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.



தான் நேசிக்கும் நாட்டிற்கும், மக்களின் நலனுக்காகவும் வேட்புமனுவை திரும்பப் பெறுவதாக சஜித் பிரேமதாச தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.



ஆகவே பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியும் தமது பங்காளி கட்சிகளும் ஆதரவளிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages